பல்லி கனவில் வந்தால் என்ன பலன் | Palli Kanavil Vanthal Enna Palan
பல்லி கனவில் வந்தால் என்ன அர்த்தம் | Lizard Kanavu Palangal in Tamil
Kanavil Palli Vilum Palangal / கனவில் பல்லி விழுந்தால் என்ன பலன்: இந்த கனவு நம்முடைய கனவில் பல்லிகள் வருவது, நமக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே எச்சரிக்கையாகக் கூறுகிறது. கனவில் பல்லியைப் பார்த்தால், அது பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதை நாம் உணரலாம். கனவுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல; ஒவ்வொருவருக்கும் அவை மாறுபட்டு, வெவ்வேறு அர்த்தங்களை தருகின்றன. அதனால், பல்லியை கனவில் கண்டால் என்ன அர்த்தம் (palli kanavil vanthal) என்பதைப் பார்ப்போம்..!
வீட்டில் பல்லி நுழைவது:
வீட்டில் பல்லி நுழைவது போல கனவு கண்டால், அந்த கனவை காணும் நபர் மிகவும் ஜாக்கிரதியாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. ஏனெனில், இந்த கனவு காணும் நபருக்கு பெரிய பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டுமானால், அதை கவனமாக செய்ய வேண்டும் என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
சுவரில் பல்லி ஊர்ந்து செல்வது போல கண்டால் என்ன பலன்:
வீட்டு சுவற்றின் மீது பல்லி ஊர்ந்து செல்வது கனவில் வந்தால், உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் நஷ்டம் நீங்கி, நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.
சுவரில் இருந்து பல்லி கீழே விழுவது போன்று கனவில் வந்தால் என்ன பலன்:
கனவில் பல்லி சுவரில் இருந்து கீழே விழுவது போல வந்தால், உங்களுக்கு சிறிய விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இரண்டு பல்லிகள் சண்டை போடுவது போல் கனவு கண்டால்?
இது கணவன்-மனைவிக்குள் அல்லது நெருங்கிய உறவுகளில் ஒரு சிறிய சச்சரவு, மனவருத்தம் ஏற்படலாம் என்பதைக் காட்டுகிறது. அன்றைய நாளில் பொறுமையாக இருப்பது நல்லது.
பல்லி உங்களை தாக்குவது போல் கனவில் வந்தால்?
நீங்கள் நம்பும் ஒருவர், உங்கள் நல்ல முயற்சிகளை தடுக்கலாம். உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பல்லி முட்டையிலிருந்து வெளிவருவது போல கனவில் கண்டால்?
நீங்கள் புதிய முயற்சி ஒன்றை தொடங்க போகிறீர்கள். அது உங்கள் வாழ்க்கையை முன்னேற்றக்கூடியது.
பல்லி வாலை துண்டாக்குவது போல கனவில் கண்டால்?
ஒரு பெரிய அபாயத்திலிருந்து நீங்கள் தப்பிக்கப் போகிறீர்கள். உங்கள் அறிவும் சாமர்த்தியமும் பாதுகாப்பை தரும்.
பல்லி ஒளிவது போல் கனவு வந்தால்?
உறவினர்கள் அல்லது நண்பர்களால் வரும் சிக்கல்களை, உங்கள் விவேகத்தால் நீங்கள் சமாளிக்கப் போகிறீர்கள்.
பல்லியை சாப்பிடுவது போல கனவில் கண்டால்?
உங்கள் தொழில் அல்லது வேலைகளில் நல்ல அதிர்ஷ்டம் வந்து சேரும். எதிர்காலம் ஒளிமிகுந்ததாக அமையக்கூடும்.
பெரிய பல்லியை காண்பது?
முக்கியமான ஒருவர் உங்கள் வாழ்க்கையில் சேர்ந்து, மிகுந்த வளர்ச்சியை ஏற்படுத்தப்போகிறார்.
ஒளிந்திருக்கும் பல்லி கனவில் வந்தால்?
உங்களுக்குள் புதைந்திருக்கும் திறமைகள் வெளிப்பட்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவீர்கள்.
பல்லியை கொல்வது போல கனவில் வந்தால்?
உங்கள் நெருக்கமான ஒருவர் அல்லது விரும்பும் நபரை பிரிவது நேரிடக்கூடும்.
பச்சை நிற பல்லியை காண்பது?
சிறிய சிக்கல்கள் வரும், ஆனால் அவை நீங்கி, நிலைமை சீராகும்.
நிறைய பல்லிகள் ஒரே இடத்தில் வந்தால்?
மன அழுத்தம், உடல்நலக்குறைவு போன்ற பிரச்சனைகள் நேரிடக்கூடும். ஓய்வும் கவனமும் தேவைப்படும் நேரம் இது.
அழகான பல்லியை காண்பது?
வாழ்க்கையில் எதிர்ப்புகளை எளிதில் கடந்து முன்னேறுவீர்கள்.
பல்லி கடிப்பது போல கனவில் தோன்றினால்?
சிறிய விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
பல்லியை பிடிப்பது போல கனவில் தோன்றினால்?
காதல் வாழ்க்கையில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் அதைத் தவற விடுவது போல கனவு வந்தால், அந்த உறவில் தடைகள் ஏற்படலாம்.
பல்லி வலது பக்கம் மேலே செல்லும் கனவு?
உங்கள் தொழிலில் அல்லது முயற்சியில் மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறீர்கள்.