திருவிளக்கே திருவிளக்கே பாடல் வரிகள் | Thiruvilakke Thiruvilakke Lyrics Tamil
பொதுவாக ஒரு வீட்டிற்கு புதிதாக திருமணம் ஆகி ஒரு பெண் முதலில் வந்தால், அந்த பெண்ணின் கையால் முதலில் திருவிளக்கேற்ற சொல்லுவார்கள். அத்தகைய நாள் முதல் அந்த பெண் தினமும் விளக்கு ஏற்றும் பழக்கத்தை பின்பற்றுவாள்.
அதில் குறிப்பாக வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பெண்கள் தவறாமல் விளக்கு ஏற்றி பூஜை செய்வார்கள். ஏனெனில் இந்த நாட்கள் மகாலட்சுமிக்கு உரியவை. இந்த நாட்களில் திருவிளக்கு பூஜை செய்வதன் மூலம், வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று நம்பப்படுகிறது.
விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம், வீட்டில் செல்வ வளம், பண மழை பொழியும் என்பது ஒரு ஆன்மிக ஐதீகம். இப்படி விளக்கு ஏற்றி வழிபடும் போது, திருவிளக்கே திருவிளக்கே போன்ற பக்திப் பாடல்களைப் பாடுவது ஆன்மீகத்தில் மிகச் சிறப்பானதாக கருதப்படுகிறது.
Thiruvilakke Thiruvilakke Lyrics in Tamil
திருவிளக்கே திருவிளக்கே
தெய்வ விளக்கே திருவிளக்கே
சிவன் அருளால் விளங்கும் விளக்கே
சித்தி புகட்டும் திருவிளக்கே
அம்மன் அருளால் அசைந்தாடும் விளக்கே
அருள்வழி காட்டும் ஆனந்த விளக்கே
துன்பம் அகற்றும் தெய்வ விளக்கே
தோற்றம் தரும் திருவிளக்கே
சந்தன வாசம் வீசும் விளக்கே
சக்தி தரும் சாமி விளக்கே
மந்திர சக்தி நிறைந்த விளக்கே
மகிழ்ச்சி தரும் ஆனந்த விளக்கே
இருள் நீக்கும் ஒளி தரும் விளக்கே
இசை ஒலிக்கும் இன்ப விளக்கே
அருள் பரப்பும் ஆனந்த விளக்கே
அனைவரையும் காக்கும் திருவிளக்கே